பிரித்தானிய வாழ் இந்தியர்கள் தரப்போகும் ரூ.32,249 கோடி நிதியுதவி: எதற்கு தெரியுமா?

December 1, 2017 11:50 AM

10 0

பிரித்தானிய வாழ் இந்தியர்கள் தரப்போகும் ரூ.32,249 கோடி நிதியுதவி: எதற்கு தெரியுமா?

இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு ரூபாய் 32,249 கோடி நிதியுதவியை அளிக்க பிரித்தானியா வாழ் இந்திய தொழிலதிபர்கள் உறுதியளித்துள்ளனர்.

பிரித்தானிய தலைநகர் லண்டனுக்கு இந்திய நதிநீர் மேலாண்மை, கங்கை, நீர்வளத்துறை மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

அப்போது கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்து இந்திய வம்சாவளி தொழிலதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், ரூபாய் 32,249 கோடி நிதியுதவி அளிப்பதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய அரசின் சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரித்தானியாவில் இருக்கும் பெரு நிறுவனங்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சேர்ந்து கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டத்துக்காக 32,249 கோடி பங்களிப்பு அளிக்க ஒப்பு கொண்டுள்ளனர்.

இதில் பிரித்தானியாவை சேர்ந்த லிண்டன் வாட்டர், செல்டிக் ரினீவபிள்ஸ், மெடிபார்ம் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் கங்கை நதியை சுத்தப்படுத்த தொழிநுட்ப உதவி செய்வதாக உறுதியளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...