பிரித்தானியாவில் பாதுகாப்பு கோரியுள்ள 845 இலங்கைத் தமிழர்கள்

February 9, 2018 2:58 AM

11 0

பிரித்தானியாவில் முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உட்பட 845 இலங்கைத் தமிழர்கள் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு இவ்வாறு பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவர்களில் நூற்றுக்கு 6 வீதத்திலானோருக்கு மாத்திரமே அரசியல் பாதுகாப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனையவர்கள் சமர்ப்பித்த அரசியல் பாதுகாப்பு கோரும் விண்ணப்பங்கள் இன்னமும் ஆய்வு செய்யப்படுவதாக பிரித்தானிய உள்நாட்டு அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசியல் பாதுகாப்பு கோரியவர்களில் தாம் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதைக்கு உள்ளாவதாக 50 பேர் ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...