பிரித்தானியாவில் சொந்த மகளையே கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை: அதிர்ச்சி காரணம்..!!

February 10, 2018 12:00 AM

8 0

பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளவயது மகளை கழுத்தை நெரித்து தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் கென்ட் நகரின் Maidstone பகுதியில் 19 வயதேயான ஒலிவியா என்பவரையே அவரது தந்தை Richard Kray கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

தொடர்ந்து தமது மனைவியை இதேபோன்று கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற நிலையில் அவர் இவரிடமிருந்து தப்பி நேராக பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

அவரை தொடர்ந்து சென்ற ரிச்சர்ட் பொலிசிடம் சிக்கியது மட்டுமின்றி தமது மகளை கொலை செய்தது தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலமும் அளித்துள்ளார்.

அதில் ரிச்சார்ட்(64) கொலைக்குற்றத்தை மறுத்துள்ளதுடன் தமது மகளின் நிலையை பொறுக்க முடியாமல் தான் அவரை இந்த உலகத்தில் இருந்து விடுவித்ததாக தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...