பிரித்தானியாவில் கடுமையான பனிப்பொழிவு: போக்குவரத்தில் பாதிப்பு

February 5, 2018 8:35 AM

15 0

பிரித்தானியாவில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, சில பகுதிகளில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக, தென்கிழக்கு இங்கிலாந்தில் எம்.20 நெடுஞ்சாலை உட்பட பல வீதிகளூடான போக்குவரத்தில் நேற்று பாதிப்பு ஏற்பட்டதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, கடுமையான பனிப்பொழிவு காணப்படும் நிலையில், பாதுகாப்பான பயணத்தை முன்னெடுக்குமாறு வாகனச் சாரதிகளுக்கு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த வாரம் பிரித்தானியாவின் அநேகமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுமென்பதுடன், குளிரான காலநிலை காணப்படுமெனவும், பிரித்தானியாவின் வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...