பிரித்தானிய மாணவியை கொன்று புதைத்தது எப்படி: கொலைகாரனின் மனைவி வெளியிட்ட தகவல்..!!

June 15, 2018 1:00 AM

8 0

பிரான்சில் தொடர் கொலைகளுக்கு காரணமான கொலைகாரனின் முன்னாள் மனைவி பிரித்தானிய மாணவியை கொலை செய்து உடலை புதைத்தது தொடர்பில் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போது 70 வயதாகும் Monique Oliver தமது முன்னாள் கணவரான Michel Fourniret தான் அப்போது 20 வயதான பிரித்தானிய மாணவி Joanna Parrish என்பவரை பலாத்காரம் செய்து கொன்றுள்ளார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ரகசிய விசாரணையின்போது அவர் இந்த சம்பவத்தை விவரித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு Michel Fourniret தாம் பிரித்தானிய மாணவியை கொலை செய்துள்ளதாக முதன் முறையாக ஒப்புக்கொண்ட பின்னர் அவரை விவாகரத்து செய்துள்ளதாக கூறும் Monique Oliver,பலமுறை தமது கணவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தும் வந்துள்ளார்.

நீண்ட 28 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பின்னர் தமது மகளின் மரணத்திற்கு நீதி கிடைத்துள்ளதாக Joanna-ன் பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...