போராட்டத்தில் குதித்துள்ள மின்சார சபை ஊழியர்கள்! தயார் நிலையில் இராணுவம்

September 17, 2017 9:49 AM

10 0

நாடு முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்கும் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்க இராணுவம் தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் மின்தடை மற்றும் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களை அசௌகரியத்துக்குள்ளாக்காது தடையற்ற மின்சார வழங்கலை உறுதிப்படுத்தவும், மின்சார சபையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் இராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவப் பேச்சாளா் ரொஷான் செனவிரத்ன இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், தடையின்றி மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகளை உறுதிப்படுத்த இராணுவத்தில் 765 பேர் தயாராக உள்ளனர்.

ஐவர் கொண்ட 153 குழுக்களாக பிரித்து தயார் நிலையில் வைத்துள்ளோம். மின்சார சபை வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் இராணுவத்தினர் மின்சார சபையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்றும் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...