பெருகி வரும் முதலைகள்! – அச்சத்தில் கிளிநொச்சி மக்கள்

October 9, 2017 11:52 AM

5 0

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் வீதியில் உள்ள நீரோடையொன்றில் முதலைகள் பெருகி வருவதாக தெரிவிக்கும் மக்கள், இதனால் நாளாந்தம் அச்சத்தில் வாழ்வதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதியில் உள்ள ‘மரப்பாலம்’ என அழைக்கப்படும் பகுதியில் காணப்படும் நீரோடையில் நீர் வற்றியுள்ளதால், குறித்த பகுதியில் முதலைகளின் அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நீரோடைக்கு அருகில் மேய்ச்சலுக்காகவும், நீர் தேடியும் வரும் கால்நடைகளை முதலைகள் வேட்டையாடி வருவதோடு, நீர் வற்றியுள்ளதால் கிராமப் பகுதிகளுக்குள்ளும் முதலைகள் எட்டிப்பார்ப்பதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

சுமார் 30இற்கும் மேற்பட்ட முதலைகள் அங்கு காணப்படுவதாக தெரிவிக்கும் மக்கள், இவற்றின் நடமாட்டம் காரணமாக தமது இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர். அத்தோடு, எந்நேரமும் அச்சத்தில் வாழ்வதாகவும், தமது பிள்ளைகளை வெளியில் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்ற போதும், அது தொடர்பான எச்சரிக்கை பலகைகள் எதுவும் அங்கு காட்சிப்படுத்தப்படாமல் உள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, முதலைகளை பிடித்து உரிய இடங்களில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...