பிரபல பாடசாலையில் மாணவனின் கன்னத்தில் அறைந்த ஆசிரியருக்கு நடந்த விபரீதம்

November 24, 2017 5:42 AM

4 0

நீர்­கொ­ழும்பு கல்வி வல­யத்தில் உள்ள தேசிய பாட­சா­லையைச் சேர்ந்த 11 வய­து­டைய மாணவன் ஒரு­வரை தாக்­கிய சம்­பவம் தொடர்­பாக கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்ட சந்­தேக நப­ரான ஆசி­ரி­யரை நீர்­கொ­ழும்பு பதில் நீதிவான் சந்த நிரி­ஹெல்ல 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடு­தலை செய்தார்.

கொட்­ட­தெ­னி­யாவ பிர­தே­சத்தில் வசிக்கும் விஞ்­ஞான பாட ஆசி­ரி­யரே பிணையில் விடு­தலை செய்ய உத்­த­ர­வி­டப்­பட்­ட­வ­ராவார்.

கடந்த 15 ஆம் திகதி தரம் ஆறில் கற்கும் மாண­வர்கள் சில­ருக்­கி­டையில் நண்­பகல் வேளையில் சிறு பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. கைது செய்­யப்­பட்­டுள்ள ஆசி­ரியர் அதனை விசா­ரிக்க சென்ற வேளையில் குறித்த மாண­வனின் கன்­னத்தில் அறைந்­துள்ளார்.

இது தொடர்பாக மாண­வனின் பெற்றோர் நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்டை அடுத்து சந்­தேக நப­ரான ஆசி­ரியர் கைது செய்­யப்­பட்டு புதன்­கி­ழமை மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­ட­போதே சந்­தேக நபரை பிணையில் விடு­தலை செய்ய நீதிவான் உத்­த­ர­விட்டார்.

இந்த வழக்கு அடுத்த வருடம் (2018) ஜனவரி மாதம் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...