பிரதமர் மோடிக்கு தீபாவளி விருந்து அளித்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு..!!

November 8, 2018 7:05 PM

13 0

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றார். அங்கு அவரை வரவேற்ற வெங்கையா நாயுடு, பிரதமர் மோடியுடன் தற்போதைய நாட்டு நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர், தீபாவளி விருந்தாக மதிய உணவு அளித்தார். அப்போது, சமீபத்தில் 7 நாள் பயணமாக ஜிம்பாப்வே, போட்ஸ்வானா மற்றும் மலாவி உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்தது குறித்து ஆலோசித்தனர்.

இதுதொடர்பாக துணை ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். அப்போது அவருக்கு தீபாவளி விருந்தாக மதிய உணவு அளித்து உபசரிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...