பாம்புகளைக் கொண்டு நூதன முறையில் கொள்ளையிட்டவருக்கு ஏற்பட்ட நிலை

May 16, 2018 1:15 AM

11 0

பாம்புகளைக் கொண்டு நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு கம்பளை நீதவான் நீதிமன்ற நீதவான் நிலன்த பிலபிட்டிய விளக்க மறியல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் 23ம் திகதி வரையில் குறித்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் கம்பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட, குடு நுவான் எனப்படும் நுவான் குமார என்பவருக்கே இவ்வாறு விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாம்புகளைப் பிடித்து மக்கள் இருக்கும் இடங்களில் போட்டு, பாம்புப் பீதியைக் காண்பித்து இவர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டமைக்காக குறித்த நபருக்கு ஏற்கனவே சில பிடிவிராந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்பளை கல்கெடியாவ பிரதேசத்தில் நூலகம் ஒன்றிற்குள் பாம்பு ஒன்றை போட்டு, அங்கிருந்த பெண்களிடமிருக்கும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட இந்த நபர் முயற்சித்துள்ளார்.

பாம்பைக் கண்டதும் பெண்கள் கூச்சலிட்ட காரணத்தினால் அருகாiமையில் இருந்தவர்கள் அங்கு கூடிய போது, அருகாமையில் உள்ள கடையொன்றில் 8000 ரூபா பணத்தை குறித்த நபர் களவாடிச் சென்றுள்ளார்.

அண்மையில் கடவத்தை பிரதேசத்தில் பழக்கடையொன்றுக்கு சென்று பாம்பு ஒன்றைப் போட்டு அங்கிருந்த பெண்ணிடம் நகையை கொள்ளையிட முயற்சித்த போது, அருகாமையில் இருந்தவர்கள் கூடி தாக்கியுள்ளனர்.

இதனால் குறித்த நபரின் ஒரு கையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. “மிஸ் அங்கே பாருங்கள் பாம்பொன்று” எனக் கூறி பெண்களின் பீதியடையச் செய்து நகைகளை இவர் கொள்ளையிடுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொடிய விசமுடைய பாம்புகளை பிடித்து அவற்றைத் தாக்கி குற்றுயிராக்கி பின்னர் இவ்வாறு மக்கள் செறிவாக இருக்கும் இடங்களில் போட்டு, இந்த நபர் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...