பெப்பர்ச்சுவல் ட்ரெஸறீஸ் நிறுவன சொத்துக்கள் முடக்கம்: நால்வர் பணி இடைநிறுத்தம்

January 13, 2018 3:43 AM

12 0

பெப்பர்ச்சுவல் ட்ரெஸறீஸ் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகஇலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.அத்துடன், பெப்பர்ச்சுவல் நிறுவனத்தின் நான்கு அதிகாரிகள் பணியிலிருந்துஇடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் மேற்பார்வை வரம்பின் கீழ்வருகின்ற பெப்பர்ச்சுவல் ட்ரெசறீஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் தொடர்பில் உரியநடவடிக்கை எடுக்க ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்பர்ச்சுவல் ட்ரெஸறீஸ் நிறுவனமானது, இலங்கை மத்திய வங்கியின் முன்னனுமதியின்றிசொத்துக்களை விற்பனை செய்தல், இலாபங்களைப் பகிர்ந்தளித்தல் மற்றும்கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் ஆகியவற்றிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது.

இப்பணிப்புரைகள் 2018 யூலை 06 வரை நடைமுறையிலிருக்கும்.இலங்கை மத்திய வங்கியானது, பெப்பர்ச்சுவல் ட்ரெஸறீஸ்நிறுவனம் இலங்கை மத்திய வங்கியுடன் வைத்துள்ள சொத்துகளை முடக்கியுள்ளதுடன் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனைஆணைக்குழுவின் மேற்பார்வை வரம்பின் கீழ் வருகின்ற பெப்பர்ச்சுவல் ட்ரெஸறீஸ்நிறுவனத்தின் சொத்துகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழுவுக்குஅறிவித்துள்ளது.

மத்திய வங்கியினால் நடத்தப்பட்ட உள்ளக விசாரணைகள் மற்றும் புலனாய்வுகளைத் தொடர்ந்து,அத்தகைய விசாரணைகள் மற்றும் புலனாய்வுகளில் கண்டறியப்பட்டவைகளை அடிப்படையாகக்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் கைநூலின் வகைப்படுத்தல், கட்டுப்படுத்தல் மற்றும்மேன்முறையீட்டு விதிகளுக்கிசைவாக சில அலுவலர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் நான்கு அலுவலர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என மத்தியவங்கி தெரிவித்துள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...