புதிய இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சரின் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

June 13, 2018 1:12 PM

11 0

புதிய இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சரின் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (13) மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய முன்றலில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து சமய அலுவல்கள் அமைச்சராக, இந்து மதத்தைச் சேர்ந்த டி.எம். சுவாமிநாதன் இருக்கின்ற நிலையில் அதன் பிரதி அமைச்சராக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த காதர் மஸ்தான் நேற்று நியமிக்கப்பட்டிருந்தார்.

இதற்கு இந்த மத அமைப்புக்கள் உட்பட இந்து மதத்தைச் சேர்ந்த பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், சைவ மகா சபையின் ஏற்பாட்டில் பிரதி அமைச்சரின் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...