புதிய அரசியலமைப்பு வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்தரங்கு..!! (படங்கள்)

October 8, 2017 5:20 PM

4 0

புதிய அரசியலமைப்பு வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக தமிழ் ஈழ விடுதலை இயக்க உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவரும் அக்கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற இக்கருத்தரங்கில் புதிய அரசியலமைப்பபில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழருடைய விடயங்கள், முஸ்லீம்களிற்கான விடயங்கள், புதிய அரசியலமைப்பிமஸல் உள்ளடக்கப்பட்ட காணி, பொலிஸ் தொடர்பான விடயங்கள், வடக்கு கிழக்கு இணைப்பு, போன்ற பல்வேறு கருத்தாடல் நடைபெற்றது.

குறித்த கருத்தரங்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சிற்றம்பலம், எஸ்.கந்தசாமி (சட்டத்தரணி), இ.தம்பையா (சட்டத்தரணி), என். சிறிகாந்தா (ரெலோ அமைப்பின் செயலாளர்), வடமாகாண சபை சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா, கருணாகரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், அரசியல் ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...