பொதுமக்களுக்கான யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வேண்டுகோள்!

December 1, 2017 6:59 AM

9 0

பொதுமக்களுக்கான யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வேண்டுகோள்!

தற்போதைய பருவமழைக் காலத்தைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அதிக எண்ணிக்கையான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். குறிப்பாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

மருத்துவ விடுதிகளில் அளவுக்கதிகமான நோயாளிகள் தினமும் அனுமதிக்கப்படுகின்றனர்.

எனவே பொதுமக்கள் நோயாளிகளைப் பார்வையிட வருவதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

மகப்பேற்று விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட ஒருவருடன் ஒருவர் மாத்திரமே நிற்பதற்கு அனுமதிக்கப்படுவர்.

குழந்தைகள் பிறக்கின்ற போது வைத்தியசாலைக்கு வருகைதந்து பார்வையிடுவதை இயன்றவரை தவிர்த்து வீடு சென்ற பின்னர் பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

பொதுமக்கள் நோயாளியைப் பார்க்க வரும்போது தாம் கொண்டுவரும் உணவு உடை முதலான பொருள்களைக் கொடுத்துவிட்டு விரைவாக விடுதிகளை விட்டு வெளியேறி வைத்தியசேவையை வழங்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...