போதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடையவர்களுக்கு மரணதண்டனை

July 11, 2018 4:51 PM

15 0

போதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடையவர்களுக்கு மரணதண்டனை

போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி என்ற வகையில் தான் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி கெட்டம்பே விளையாட்டரங்கில் இடம்பெற்ற போதைப்பொருளுக்கு எதிரான பாடசாலையின் பலம் என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

பௌத்த சமூகம் என்ற வகையில் மரணதண்டனை குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றபோதும் உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் உபதேசங்களை நிகழ்த்தியும் உபதேசங்களை செவிமடுத்தும் வருகின்ற ஒரு சமூகம் இந்தளவுக்கு பிழையான வழிகளில் செல்லுமாக இருந்தால் அதனை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுக்க வேண்டும்.

நாட்டில் தற்போது கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பதற்கு போதைப்பொருளைப் போன்று சமூக வலைத்தளங்களும் இன்று முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலைமைகளில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கமும் பெற்றோரும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

எனவே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி என்ற வகையில் தான் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன் போது தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...