புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மகாசங்கத்தினரிடம் ஆசிபெற்றார்..!!

April 15, 2018 4:29 PM

7 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில விகாரைகளுக்கு சென்று மகா சங்கத்தினரை சந்தித்து பிறந்திருக்கும் புத்தாண்டை முன்னிட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

முதலில் பம்பலபிட்டிய ஸ்ரீ வஜிராராமயவுக்கு நேற்று (14) பிற்பகல் சென்ற ஜனாதிபதி சமயக் கிரியைகளில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து விகாராதிபதி சங்கைக்குரிய திருக்ணாமலயே ஆனந்த நாயக தேரரை சந்தித்து சுகதுக்கங்களை கேட்டறிந்ததைத் தொடர்ந்து மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து பிறந்திருக்கும் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதிக்கு ஆசீர்வாதங்களை வழங்கினர்.

அதன் பின்னர் பன்னிபிட்டிய ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாரைக்கு சென்று சியம் மகா நிகாயவின் கோட்டே பிரிவின் மகாநாயக தேரர் கலாநிதி சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், தேரரின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார்.

இதன்போது தேரர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு பிறந்திருக்கும் புத்தாண்டை முன்னிட்டு ஆசீர்வாதங்களை வழங்கினார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...