பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுடன் அமித்ஷா சந்திப்பு..!!

July 14, 2018 5:05 AM

12 0

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு தரக்கோரி பாஜகவினர் சம்பர்க் சே சமர்தான் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பிரச்சாரத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்பட மத்திய மந்திரிகள், முக்கிய தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு பிரபலங்களை சந்தித்து வருகின்றனர். இந்த சந்திப்பின்போது, பாஜக அரசின் நான்கு ஆண்டு கால சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படும்.

அதன் ஒரு பகுதியாக, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று தெலுங்கானா மாநிலத்துக்கு சென்றார். ஐதராபாத்தில் உள்ள பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வீட்டுக்கு அமித்ஷா சென்றார்.

அவரை நேரில் சந்தித்து பாஜகவின் 4 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து விளக்கினார். அப்போது அவருடன் பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...