புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் நடைபெற்ற, “பொதுநோக்கு மண்டப” அடிக்கல் நாட்டு விழா (படங்கள்)

December 1, 2017 10:24 AM

7 0

புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் நடைபெற்ற, “பொதுநோக்கு மண்டப” அடிக்கல் நாட்டு விழா (படங்கள்)

புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில், “பொதுநோக்கு மண்டப” அடிக்கல் நாட்டு விழா இன்று 01.12.2017 காலை எட்டு மணிக்கு, மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

“புங்குடுதீவு மண்ணின் மைந்தர்களில் ஒருவரான” திரு.இ.இளங்கோவன் அவர்கள் (தலைவர், “புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றம்”) தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்,

பிரதம விருந்தினராக “பிரபல வர்த்தகர்களில் ஒருவரான” திரு.திருமதி செல்லையா மகேந்திரன் கலந்து சிறப்பித்ததுடன்,

பேராசிரியர் திரு.கா.குகபாலன் (செயலாளர், “புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றம்”), திரு எஸ்.கே.சண்முகலிங்கம் (வேலணை பிரதேச மத்தியஸ்த சபை தவிசாளர்) திரு.திருலிங்கம் (பொருளாளர், “புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றம்”), திருமதி.த.சுலோசனாம்பிகை (உபசெயலாளர், “புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றம்”), செல்வி பொ.யமுனாதேவி (வட இலங்கை சர்வோதய அமைப்பாளர்), திரு,நா.நாகராசா (அதிபர், ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம்), திரு.கு.சந்திரா (ஓய்வுநிலை கிராம சேவையாளர் & முகாமையாளர் “புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றம்”), திரு.நா.சுந்தரராஜா (ஓய்வுநிலை கிராம சேவையாளர்), திரு.ஞானலிங்கம் (பிரபல வர்த்தகர்), திரு.தனபாலசிங்கம் (சிறுப்பிட்டி அரிநாயகன்புல வரசித்தி விநாயகர் ஆலய தலைவர்) உட்பட பலரும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி நிகழ்வில், மன்ற அங்கத்தவர்கள், ஆர்வலர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

மேற்படி புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில், “பொதுநோக்கு மண்டப” அடிக்கல் நாட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றதுடன், மேற்படி “பொதுநோக்கு மண்டபத்தை” கட்டும் முழுமையான செலவை, “பிரபல வர்த்தகர்களில் ஒருவரான” திரு.திருமதி செல்லையா மகேந்திரன் குடும்பத்தினர் பொறுப்பேற்று உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...