பாகிஸ்தான்: ஆப்கானிஸ்தான் குடியேறிகள் பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி..!!

October 9, 2017 6:00 PM

5 0

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட வன்முறைக்கு பயந்து தப்பிவந்த ஹாஸாரா இன மக்கள் அருகாமையில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தென்மேற்கே பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டா அருகே ஏராளமாக வசித்து வருகின்றனர்.

இவர்களில் சிலர் அருகாமையில் உள்ள சந்தைப் பகுதியில் வியாபாரம் செய்வதற்காக ஒரு வேனில் இன்று காய்கறிகளை ஏற்றிச் சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சமீபகாலமாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஹஸாரா இனத்தவர்கள், சன்னி முஸ்லிம்கள் மீது தலிபான்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...