பிக் பாஸ் வீட்டில் இவரா என்று கூறி கமல் சிரித்தாரே, அது யார் தெரியுமா?..!! (வீடியோ)

June 13, 2018 5:35 PM

79 0

பிக் பாஸ் வீட்டில் இவரா என்று கூறி கமல் சிரித்தாரே, அது யார் தெரியுமா?..!! (வீடியோ)

பிக் பாஸ் வீட்டில் இவரா என்று கூறி கமல் சிரித்தாரே அது யார் என்று தெரிய வந்துள்ளது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் 17ம் தேதி துவங்குகிறது. வீடு ரெடி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உலக நாயகன் கமல் ஹாஸனும் ரெடி. ஆனால் போட்டியாளர்களின் பட்டியல் மட்டும் இன்னும் வெளியிடப்படவில்லை. இம்முறை யார், யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகரித்துள்ளது.

கமல் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இன்னும் 4 நாட்கள் தான் உள்ளது என்று கமல் ஹாஸன் கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் அரசியல்வாதி கமல் என்ன கருத்தெல்லாம் சொல்லப் போகிறாரோ என்று எதிர்பார்ப்பும் உள்ளது. சிரிப்பு பிக் பாஸ் 2 போட்டியாளர்களின் குணங்கள் குறித்து ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகின. அதில் ஒரு வீடியோவில் கமல் செல்போனை பார்த்ததும் இவரா என்று கூறி சிரிப்பார். அது யார் என்பது தெரிய வந்துள்ளது.

கலகலப்பு முதல் சீசனிலேயே பவர் ஸ்டார் சீனிவாசன் கலந்து கொள்ளப் போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது சீசனில் பிக் பாஸ் 2 வீட்டை கலகலக்க வைக்க வருகிறாராம் பவர் ஸ்டார். டிஆர்பி பவர் ஸ்டார் பண்ணும் ரவுசை பார்க்கவே ஒரு கூட்டம் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்க்கும். டிஆர்பிக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது. ஆமா, கமல் சொன்ன அந்த ரணகள பார்ட்டி யாராக இருக்கும்?

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...