பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார்?: இது கமலே எதிர்பார்க்காத ஆளாம்..!! (வீடியோ)

September 9, 2018 10:27 AM

8 0

பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று யார் வெளியே போகப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் ஆர்வமாக இல்லை. பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள ஐஸ்வர்யா நாமினேட் செய்யப்பட்டிருந்தார். ஆனால் ஏதாவது செய்து பிக் பாஸ் அவரை காப்பாற்றிவிடுவார் என்பது பார்வைாயளர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் நினைத்தது போன்றே பிக் பாஸ் போங்கு ஆட்டம் ஆடி ஐஸ்வர்யாவை காப்பாற்றிவிட்டார்.

பிக் பாஸ் இப்படி ஐஸ்வர்யாவை தொடர்ந்து காப்பாற்றி வருவது பார்வையாளர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது. அதுவும் ஐஸ்வர்யாவுக்கு கமல் ரெட் கார்டு காட்டியும் பார்வையாளர்களே அவரை காப்பாற்றியது போன்று சீன் போட்டுவிட்டனர். உண்மையில் ஐஸ்வர்யாவை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு சுத்தமாக இல்லை.

வீடியோ மும்தாஜ், சென்றாயன், ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரில் யாரை வெளியேற்றுவது நியாயம் என்று கமல் கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அனைவரும் ஆர்வமாக உச்சரித்த பெயர். இது நான் எதிர்பார்த்தது இல்லை என்று கூறி கமல் எவிக்ஷன் கார்டை எடுப்பது போன்று வீடியோவில் காட்டியுள்ளனர். இனி நீங்க யாரையாவது வெளியே அனுப்பினால் என்ன அனுப்பாவிட்டால் எங்களுக்கு என்ன? கமல் ஒட்டை சரியாக போட்டால் மட்டும் பிக் பாஸ் ஐஸ்வர்யாவை வெளியேற்றிவிடுவாராக்கும்.

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ஆர்த்தி சொன்னது உண்மை தான் போன்று. பிக் பாஸ் டைட்டில், வீடு எல்லாம் ஐஸ்வர்யாவுக்கே. இதற்காகத் தான் பிக் பாஸ் தில்லாலங்கடி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். பாவம், இதில் கமல் என்ன செய்ய முடியும்?. எழுதிக் கொடுத்ததை வாசிக்கிறார்.

ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதாக கமல் ஹாஸன் கூறியதை கேட்டு கோபப்படாத பார்வையாளர்களே இல்லை. அந்த அளவுக்கு அவர்கள் ஐஸ்வர்யா மீது கோபத்தில் உள்ளனர். பார்வையாளர்களின் மனநிலை பற்றி தெரிந்தும் பிக் பாஸ் இப்படி பாரபட்சமாக நடந்து கொள்வது சரி அல்ல. நீங்களே முடிவு எடுத்துவிட்டால், பார்வையாளர்களை ஏன் ஓட்டு போடச் சொல்லணும்?

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...