பள்ளியில் மாணவர்களை வெறும் காலில் வெயிலில் நிற்க வைத்த கொடூரம்..!!

February 10, 2018 4:05 PM

4 0

அம்பத்தூர் மார்க்கெட்டில் அரசு உதவி பெறும், குப்தா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 700 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி முதல் மாணவர்கள் அனைவரும் ஷூ அணிந்து வரவேண்டும் என்று பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.

நேற்று பள்ளிக்கு வந்த 6, 7, 8-ம் வகுப்புகளை சேர்ந்த 150 மாணவ- மாணவிகள் ஷூ அணியவில்லை.

இதனால் மாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பாமல் அவர்கள் அணிந்திருந்த செருப்புகளை கழற்ற சொல்லி வெறும் காலில் வெயிலில் நிற்க வைத்தனர்.

இதனால் சோர்வடைந்த மாணவர்கள் சிறிது நேரத்தில் தரையில் அமர்ந்து விட்டனர்.

மாலையில் மாணவர்களை அழைக்க வந்த பெற்றோர் வெயிலில் நிற்க வைக்கப்பட்டதை அறிந்து ஆவேசம் அடைந்தனர். உடனே பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எங்களால் உடனடியாக ஷூ வாங்க முடியாது. இப்படி நெருக்கடி கொடுத்தால் மாணவர்களுக்கு டி.சி. கொடுங்கள். நாங்கள் வேறு பள்ளியில் சேர்க்கிறோம் என்றனர்.

இதையடுத்து பள்ளி நிர்வாகம் ஷூ அணிந்து வர 10 நாள் அவகாசம் அளித்தது. அதன்பின் பெற்றோர் கலைந்து சென்றனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...