பலமான தமிழ்க் கட்சி ஒன்று உருவாகுவதை ஐதேக விரும்புவதில்லை! மனோ

April 15, 2018 9:33 AM

5 0

ஐக்கிய தேசிய கட்சி பலமான தமிழ்க் கட்சி ஒன்று உருவாகுவதை விரும்புவதில்லை என்றும், அதையும் மீறி ஒரு தமிழ்க் கட்சி பலமாகஉருவாகினால் அது தமக்கு சார்பாக இருக்க வேண்டும் என்றுமே அக்கட்சிவிரும்பும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இவ்வாறு கூறியிருக்கும் அமைச்சர் மனோ கணேசன் இந்த உண்மையை கூ றுவதற்குநான் அச்சப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில்இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப் பில் கலந்து கொண்டுகருத்து தெரிவிக்கும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஐனாதிபதியின் கீழ் உள்ள தேசிய ஒருமைப் பாடுமற்றும் நல்லிணக்க அமைச்சை என் அமைச்சின் கீழ் தருவதாக அண்மையில் நடந்தஅமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கூறியிருந்தார்.

அப்போது தலையிட்ட அமைச்சர் மங்கள சமரவீர அந்த அமைச்சு துறையை ஐனாதிபதியேவைத்திருப்பது நல்லது என கூறியிருந்தார்.

பின்னர் நான் அமைச்சர் மங்களவுடன்பேசும் போது கூறினேன். சர்வதேசத்தின் கவனத்தை கொண்டிருப்பது முக்கியமல்ல. சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என.

அவ்வாறு ஐக்கியதேசியக் கட்சி பலமான ஒரு தமிழ்க் கட்சி உருவாகுவதை ஜக்கிய தேசியக் கட்சி விரும்புவதில்லை. அப்படியே ஒரு பலமான தமிழ்க் கட்சி உருவானாலும் அந்த கட்சியினர் தமக்குசாதகமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள் என்றார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...