பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வவுனியாவிற்கு சென்ற மைத்திரி

February 5, 2018 10:38 AM

13 0

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வவுனியாவிற்கு சென்ற மைத்திரி

வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.

வவுனியா வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம்பெற்ற குறித்த பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றிருந்தது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், சிறிடெலோ கட்சியின் செயலளார் ப. உதயராசா, உட்பட வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதியின் இந்த வவுனியா விஜயத்திற்கு முன்பிருந்தே அங்கு பாதுகாப்பு தொடர்பிலான நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...