பரபரப்பான சூழ்நிலையில் விஜயகலா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

July 7, 2018 1:46 AM

9 0

அமைச்சு பதவி இல்லாமல் போய்விட்டதென நான் அதிர்ச்சியடையவில்லை என முன்னாள் இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

எனது அரசியலை நான் தொடர்ந்து செய்து கொண்டு செல்வேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் கட்டியெழுப்பப்படுவது அவசியம் என கருத்து தெரிவித்தமையால் விஜயகலா மகேஸ்வரன் பாரிய சர்ச்சைக்கு உள்ளாகினார். அதன் பின்னர் அவர் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.

விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் வர வேண்டிய அவசியம் குறித்து ஏன் கூறினீர்கள் என விஜயகலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளில் தெரியவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கணவர் மகேஸ்வரனை விடுதலை புலிகள் அமைப்பு கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவ்வாறான அமைப்பு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் என்ன நியாயம் உள்ளதென அவரிடம் குறித்த ஊடகம் வினவியுள்ளது. இதற்கு பதிலளிப்பதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பிரச்சினை ஏற்படுத்துவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க கடவுள் உள்ளார் என விஜயகலா மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...