பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மின்சார பணியாளர்களுக்கு மின்சக்தி அமைச்சின் மகிழ்ச்சியான செய்தி

September 17, 2017 11:03 AM

11 0

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மின்சார பணியாளர்களுக்கு இரண்டு நாட்கள் கொடுப்பனவுடன் கூடிய விடுமுறை வழங்குவதாக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.

மின்சார பணியாளர்களின் போராட்டம் இன்று 5ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே, அமைச்சர் இன்று குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதற்கமைய, 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டவர்களுக்கு விடுமுறையுடன் கூடிய சம்பளத்தை வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பணிப்புறக்கணிப்பை கைவிட்டு நாளைய தினம் மீண்டும் பணிக்குத் திரும்புமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...