பணக்காரர்களுக்கு கூடுதலாக வரி விதிக்க அரசுக்கு கோரிக்கை..!!

October 8, 2017 12:00 AM

9 0

சுவிட்சர்லாந்து நாட்டில் பணக்காரர்களுக்கு கூடுதலாக வரி விதிக்க வேண்டும் என அந்நாட்டை சேர்ந்த சுவிஸ் சோசியலிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சுவிஸ் சோசியலிஸ்ட் கட்சி இக்கோரிக்கையை விடுத்துள்ளது.

இதுக்குறித்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பணிக்கு செல்லாமல் தங்களது சொத்துக்கள் மூலம் அதிகளவில் வருவாய் ஈட்டும் பணக்காரர்களுக்கு கூடுதலாக வரி விதிக்க வேண்டும்.

குறிப்பாக, வருடத்திற்கு ஒரு லட்சம் பிராங்க் வரை வருவாய் ஈட்டும் பணக்காரர்கள் செலுத்தும் வரியை 150 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும்.

பணக்காரர்களுக்கு கூடுதலாக வரி விதிப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வரி சுமை வெகுவாக குறைக்கப்படும்.

இதுமட்டுமில்லாமல், இக்கூடுதல் வரி விதிப்பால் அரசாங்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 பில்லியன் பிராங்க் வரை கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இத்தொகையை நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என சுவிஸ் சோசியலிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...