பகிரங்கப்படுத்தினால் பயங்கரவாதியா? வடக்கு முதல்வர் பேச்சு

July 12, 2018 5:22 PM

10 0

எமது மக்களுக்கு எது தேவையோ அதை பகிரங்கப்படுத்தினால் உடனே எம்மைப் பயங்கரவாதிகளாக அரசாங்கம் பார்க்கிறது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அலுவலகத்தை இன்று திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் பிரதிநிதிகளின் ஒத்திசைவுடன் மூன்று வரவு செலவு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆனால், அதில் தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய ஒதுக்கீடுகளோ, திட்டங்களோ உள்வாங்கப்படாமை கவலையளிக்கின்றது.

இதனை பகிரங்கப்படுத்தினால் எம்மை அரசாங்கம் பயங்கொண்டு பார்ப்பதுடன், பயங்கரவாதிகள் என்று பார்க்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...