நீலகிரியில் குரங்கு காய்ச்சல் பீதி..!!

January 13, 2018 3:05 AM

12 0

நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கேரள மாநிலம் சுல்தான்பத் தேரியில் ஒருவருக்குக் குரங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நீலகிரி மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லைகளில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரம் பேருக்கு குரங்கு காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. இந்தக் காய்ச்சல் குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்பதால் மாவட்டத்தில் எங்குக் குரங்குகள் இறந்தாலும் அதன் ரத்த மாதிரியைச் சேகரித்து மணிப்பாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது.

மேலும் இந்தக் காய்ச்சல் குரங்குகளின் உடலில் உள்ள பேன்கள் மூலம் பரவக்கூடியது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை இந்தக் காய்ச்சல் உறுதி செய்யப்படாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...