நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசணம்..!!

April 16, 2018 5:05 AM

9 0

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாராய் ராமேஸ்வரத்திற்கு குடும்பத்தினருடன் வந்தார். அதிகாலை ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசணம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.கடந்த 13ம் தேதி இந்தியாவிற்கு வந்த நேபாளத்தின் முன்னாள் பிரதமர் பாபுராம் படடாராய் வரும் 21ம் தேதிவரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.

குறிப்பாக டில்லி, பெங்களுரு, மதுரை, ராமேஸ்வரம், மும்பை, ஜாம்நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களை சுற்றிப்பார்க்கவுள்ளார். அந்த வகையில் நேற்று இரவு ராமேஸ்வரத்திற்கு வருகைதந்த அவர் இன்று அதிகாலை 05.35. மணிக்கு ராமநாதசுவாமி கோவிலுக்கு வருகைதந்தார் .

கோவில் உதவிஆணையர் பாலகிருஷ்ணன், துணைதாசில்தார் ஜபார், மற்றும் கோவில்அதிகாரிகள் அவரை வரவேற்றனர். பின்னர் குடும்பத்தினருடன் ஸ்படிகலிங்க தரிசணம் செய்தபின்னர். கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசணம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...