நான் பணம் கொண்டு போவதில்லை: மற்றவர்கள் தான் பணம் கொடுப்பார்கள்: முகேஷ் அம்பானி

December 2, 2017 1:35 AM

4 0

நான் பணம் கொண்டு போவதில்லை: மற்றவர்கள் தான் பணம் கொடுப்பார்கள்: முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான முகேஷ் அம்பானி எப்போதும் பணம் கொண்டு போவதில்லை என்றும், தனக்காக மற்றவர்கள் தான் கொடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான முகேஷ் அம்பானி, பலதுறை தலைவர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கில் பங்குபெற்றார். அப்போது அவர் கூறியதாவது: பணம் பற்றி நான் எப்போதும் கவலைப்பட்டது கிடையாது. என்னுடைய வாழ்க்கையில் பணம் ஒரு பொருட்டே இல்லை. என்னுடைய நிறுவனத்தின் வியாபாரத்தை விரிவாக்கும் ஒரு பொருளாகத்தான் நான் பணத்தை பார்த்து வருகிறேன். புதிய புதிய சவால்கள், வியாபார ரீதியாக இருக்கும் அச்சுறுத்தல்களை சமாளிக்கவே பணத்தை பயன்படுத்தி வருகிறேன்.

இப்போது அல்ல, என்னுடைய சிறுவயது முதலே நான் சட்டைப் பையில் பணம் வைத்துக் கொள்வதில்லை. அந்தப் பழக்கம் தான் இப்போது வரையிலும் தொடர்ந்து கொண்டே வருகிறது. கிரெடிட் கார்டுகளும் என்னிடம் இல்லை. என்னுடைய செலவுகளுக்கு உடன் இருப்பவர்கள் தான் எனக்காக பில் செலுத்தி வருகின்றனர். என்னிடம் இவ்வளவு பணம் சேர்ந்ததற்கு இது கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...