நீதிமன்ற அதிகாரியை கொலை முயன்ற நபர்! சந்தேக நபரை காப்பாற்றிய பொலிஸாரினால் சர்ச்சை

July 13, 2018 2:38 PM

9 0

அனுமதியற்ற நிர்மாணிப்புகளை நீக்குவதற்கு சென்ற பெல்மடுல்ல நீதிமன்றத்தின் பிஸ்கல் அதிகாரியை, நபர் ஒருவர் கத்தியால் குத்த முயற்சித்துள்ளார்.

எனினும் அந்த நபருக்கு எதிராக எவ்வித விசாரணையுமின்றி பொலிஸார் அவரை விடுவித்துள்ளனர்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கமைய சட்டவிரோத நிர்மாணிப்பினை அகற்றுவதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் இந்த கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.

நீதிமன்ற உத்தரவிற்கமைய குறித்த நிர்மாணிப்பு நடவடிக்கைகளை நீக்குவதற்காக சென்ற போது இடையில் குறுக்கிட்ட சந்தேக நபர் பிஸ்கல் அதிகாரியை கத்தியால் குத்துவதற்கு முயற்சித்துள்ளார்.

அதன் பின்னர் பிஸ்கல் அதிகாரி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். எனினும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் தலையிட்டு சந்தேக நபரை பிணையில் விடுவித்துள்ளார்.

கொலை செய்ய முயற்சித்த கத்தி உட்பட பொலிஸாருக்கு கிடைத்த போதிலும், சந்தேக நபரை விடுவிப்பதற்கு பொலிஸ் அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டமையினால் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...