நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்களை விசாரணை செய்த புலனாய்வுப் பிரிவு அதிகாரி குறித்து விசாரணை

November 24, 2017 1:36 AM

5 0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் விசாரணை நடத்த புலனாய்வுப் பிரிவு அதிகாரி குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய இவ்வாறு விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸூடன் தொலைபேசியில் உரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, பொலிஸ் மா அதிபர் விசாரணைகளை நடத்தத் தீர்மானித்துள்ளார்.

தொலைபேசி உரையாடல்களை ரகசியமாக ஒட்டுக் கேட்டதாக இந்த அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிக்கு எதிராக தனியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவே விசாரணைகள் நடத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...