நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பில் இதுவே சரியான தருணம்: மஹிந்த ராஜபக்ச..!!

November 10, 2018 5:41 AM

8 0

நிலையான நாட்டை ஏற்படுத்துவது என்பது மக்களின் கைகளிலேயே அடங்கியுள்ளது. அதற்கான வழியை தலைவர்கள் என்ற ரீதியில் நாம் ஏற்படுத்தி தந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பமிட்ட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியானது.

மேலும், இதுகுறித்து தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் கருத்து வெளியிட்ட பிரதமர் இதுவே மக்களுக்கு சிறந்த தருணம் என கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “நிலையான நாட்டை ஏற்படுத்துவது என்பது மக்களின் கைகளிலேயே அடங்கியுள்ளது. அதற்கான வழியை தலைவர்கள் என்ற ரீதியில் நாம் ஏற்படுத்தி தந்துள்ளோம்.

மேலும் ஒரு பொதுத் தேர்தல் உண்மையிலேயே மக்களின் விருப்பத்தின் படி நிலையான நாட்டுக்கு வழிசெய்யும்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...