நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

March 11, 2018 6:40 PM

13 0

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை விவகாரத்தை பாரப்படுத்தக் கோரும் கையெழுத்துப் போராட்டத்தில், தாயக மக்களை பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னெடுப்பில் தமிழர் தாயகத்தில் கையெழுத்து போராட்டம் ஒன்று சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இலங்கையில் தலையீடுகளை மேற்கொண்டு சர்வதேச குற்றவியல் பொறிமுறையினை இலங்கையில் அமுல்படுத்த வேண்டும் என இக்கையெழுத்து போராட்டத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக்கையெழுத்து போராட்டத்துக்கு தமது தோழமையினை வெளிப்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுசன விவகாரங்கள் அமைச்சு, தாயக மக்கள் கையெழுத்து போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...