நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போதைப் பொருள் வர்த்தகத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை

September 15, 2018 4:16 PM

10 0

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போதைப் பொருள் வர்த்தகத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை

வெளிநாட்டிலிருந்து செயற்படும் இலங்கை போதைப் பொருள் வர்த்தகர்களின் தகவல் பரிமாற்றங்களை உடனுக்குடன் கண்டறியும் வகையிலான அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களை இலங்கை பெற்றுள்ளது.

அவ்வாறான இரண்டு உபகரணங்களை ஆவுஸ்ரேலியா பொலிஸார், இலங்கை பொலிஸாருக்கு வழங்கியுள்ளது.

இந்த உபகரணங்கள் மூலம் வெளிநாட்டிலிந்து இலங்கைக்குள் வரும் தொலைபேசி அழைப்புக்கள், குறுந்தகவல், ஈ-மெயில் பரிமாற்றங்கள் என்பனவற்றை உடனுக்குடன் இலகுவாக அறிந்துகொள்ள முடியும் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதுதவிர போதைப் பொருள் வர்த்தகர்களின் வீடியோ தொடர்புகளை கண்டறியும் ஜெட் விசாரணை மென்பொருள் ஒன்றையும் ஆஸ்திரேலிய பொலிஸார் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...