நம்பிக்கையில்லா பிரேரணை வந்தால் குற்றமற்ற தன்மையை நிரூபிப்பேன்: பைஸர் முஸ்தபா

November 24, 2017 2:37 AM

4 0

நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் சந்தர்ப்பத்தில் தமது குற்றமற்ற தன்மையை நிரூபிக்கவுள்ளதாக உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டுள்ள அவர், தமக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டபோதே இதனை கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரும் சுதந்திரம் எந்தவொரு உறுப்பினர் குழுவுக்கும் உள்ளது.

இந்த நிலையில், தமது குற்றமற்ற தன்மையை குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் போது வெளிப்படுத்த எதிர்பார்த்துள்ளேன்.

தேர்தலை பிற்போடும் சூழ்ச்சிகளின் பங்குதாரர் தாம் அல்ல எனவும், தேர்தல்கள் விரைவில் நடத்தப்படுவது ஜனநாயகத்திற்கு அமைய அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...