நந்தனத்தில் 50 மாடிகளுடன் உருவாகும் மிகப்பெரிய இரட்டை டவர் கட்டிடம்..!!

October 13, 2017 4:05 PM

4 0

சென்னை நந்தனம் அண்ணா சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் பிரம்மாண்ட கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலகம்-பெரியார் பில்டிங் அமைந்துள்ள இடத்தில் பிரம்மாண்ட 2 டவர் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. ரூ.750 கோடி செலவில் மலேசிய நாட்டு நிதி உதவியுடன் இக்கட்டிடங்கள் கட்டப்படுகிறது.

வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் டவர்-1 கட்டிடம் 50 மாடிகளுடன் 230 மீட்டர் உயரம் கொண்டதாக கட்டப்படுகிறது. டவர்-2 கட்டிடம் பெரியார் பில்டிங் வளாகத்தில் 35 மாடிகளுடன் 130 மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்த 2 டவர் கட்டிடங்களை இணைக்கும் வகையில் ஆகாய நடைபாதையும் அமைக்கப்படுகிறது. 20-வது மாடி தளத்தில் இருந்து ஆகாய நடைசெல்லும்.

சென்னை மாநகரத்தில் மிகவும் பெரிய கட்டிடமாக இது அமைக்கப்படுகிறது. முக்கிய நிதி நிறுவன அலுவலகங்கள் இதில் அமைகிறது. மேலும் வணிக அலுவலகங்களுக்கு இந்த கட்டிடம் வாடகைக்கு விடப்படுகிறது.

சென்னையின் மையப் பகுதியான நந்தனத்தில் மிகப்பெரிய இரட்டை டவர் கட்டிடம் 50 மாடிகளுடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

மலேசிய நாட்டு நிதி உதவியுடன் ரூ.750 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. 25 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டிடங்கள் அமைகிறது. சென்னை மாநகரத்தில் மிக உயரமான இரட்டை கட்டிடமாக இது அமையும். இக்கட்டிட பணிகள் விரைவில் தொடங்கும்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...