தெலுங்கானா: சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் மக்களின் கவனத்தை ஈர்த்த வெள்ளிப்பட்டம்..!!

January 13, 2018 6:05 PM

11 0

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் அதே நேரத்தில் இந்தியாவின் மற்ற சில பகுதிகளில் சங்காராந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி சர்வதேச பட்டம் விடும் திருவிழா இன்று தொடங்கியது. இன்றுமுதல் மூன்று நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த திருவிழாவில் கலந்துகொண்ட ஆனந்த் ரெட்டி என்ற பட்டம் தயாரிப்பாளர் மிகவும் மெல்லிசான பட்டத்தினை வடிவமைத்துள்ளார். இதுவே உலகின் மிகவும் மெல்லிசான பட்டமாக கருதப்படுகிறது. அவர் வடிவமைத்துள்ள பட்டமானது வெள்ளியை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அரை அங்குல நீளம் மட்டுமே உடைய இந்த பட்டத்தின் எடை வெறும் அரை கிராம் மட்டுமே.

இந்த பட்டம் விடும் திருவிழாவில் கலந்துகொண்டவர்கள் ஆர்வத்துடன் ஆனந்த் ரெட்டி தயாரித்துள்ள பட்டத்தை பார்த்து செல்கின்றனர். இரவு நேரத்தில் பட்டம் பறக்கவிடுவதே, இந்த பட்டம் விடும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...