தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் எயார்லங்கா நிறுவன மோசடிகள் குறித்து கோப்குழு விசாரணை

September 17, 2017 5:07 AM

15 0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் எயார்லங்கா நிறுவன மோசடிகள் குறித்து கோப்குழு விசாரணை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் எயார்லங்கா நிறுவன மோசடிகள் குறித்து கோப்குழு விசாரணை நடத்த உள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மானப் பணிகள் மற்றும் எயார்லங்கா நிறுவனத்தின் எயார்பஸ் கொள்வனவு தொடர்பிலும் விசாரணைகளை நடாத்த கோப்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 19ம் திகதி பெருந்தெருக்கள் அமைச்சின் அதிகாரிகளும், எதிர்வரும் 20ம் திகதி எயார்லங்கா நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் கோப்குழு எதிரில் முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மானப் பணிகள் குறித்த விலைமனுக்கோரல், செலவுத்திட்டமிடலில் பாரியளவு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக கோப்குழுத் தலைவர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

எயார்லங்கா நிறுவனம் மூன்று எயார் பஸ்களை கொள்வனவு செய்வதற்காக வெளிநாட்டு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டு பின்னர் அதனை கொள்வனவு செய்யாத காரணத்தினால் 1600 கோடி ரூபா நட்டஈடாக செலுத்திய சம்பவம் தொடர்பிலும் விசாலரணை நடத்தப்பட உள்ளது.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...