திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு விழா இலங்கை மண்ணில்..!!

September 13, 2018 6:02 PM

14 0

திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு விழா இலங்கை மண்ணில்..!!

தமிழ்நாடு திருவண்ணாமலைத் தலத்தில் 1959 முதல் 2001 வரை எழுந்தருளி அருளாட்சி புரிந்த மகாசித்தர் யோகி ராம்சுரத்குமார் சுவாமிகள்.

” விசிறி சுவாமி ” என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட இவர் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். இவரது நூற்றாண்டு விழா உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

இறைநாமம் ஒன்றே நம்மை எல்லா இன்னல்களில் இருந்தும் நம்மைக் காக்கும் என்னும் கொள்கையை முன் வைத்தவர். யார் எத்தகைய இக்கட்டில் இருந்தாலும் ” யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜயகுரு ராயா ” என்னும் குருமந்திரத்தை மொழிந்தால் போதும். உடனே இறையாற்றல் ஓடிவந்து உதவும்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ரமணாஸ்ரமம் எதிரே இவரது பிரம்மாண்ட ஆஸ்ரமம் அமைந்துள்ளது.

அண்மையில் ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் யோகி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்ற யோகி அடியவர் யோகி பிரேமி கவிஞர் விசிறி சங்கரும் அவரது குழுவினரும் இலங்கைக்கு வருகை தருகின்றனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக சென்னை திரு பத்மநாபன், தென்காசி திரு கிருஷ்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...