திருமண நேரத்தில் மணப்பெண்ணை கைவிட்ட மணமகன்: மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு..!!

September 15, 2018 12:30 AM

9 0

கிரீஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் நெருங்கிய சமயத்தில் காதலன் கைவிட்டதால், அவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

லியடிடியா குயின் என்ற பெண், நபர் ஒருவரை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார், இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

ஆனால் திருமண நேரத்தில் மனம் மாறிய குயினின் காதலன் அவரை திருமணம் செய்ய விருப்பமில்லை என கூறி பிரிந்து சென்றுவிட்டார்.

இதையடுத்து மனம் கலங்கிய குயின் அதிரடியாக ஒரு முடிவை எடுத்தார், அதன்படி தன்னை தானே திருமணம் அவர் திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து குயின் கூறுகையில், என்னையே நான் திருமணம் செய்து கொண்டது எனக்குள் மிகுந்த தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நேரத்தில் என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி செலுத்துகிறேன் என கூறியுள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...