திருமணத்திற்கும், தேனிலவுக்கும் ஊக்கத் தொகை யாரும் நாடு எது தெரியுமா?..!!

February 9, 2018 12:30 AM

10 0

சீனாவில் திருமணம் மற்றும் தேனிலவு செலவுகளுக்காக ஆண்டுக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா செலவிடவுள்ளது.

சீனாவின் வடக்கில் உள்ள ஷாங்க்ஷி மாகாணத்தில் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.குறைந்து வரும் திருமணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அம்மாகண அரசு புது முயற்சி ஒன்றை எடுத்துள்ளது.

அதாவது திருமணம் மற்றும் தேனிலவு செலவுகளை அரசே தர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதற்காக ஆண்டுக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளதாகவும், புதுமணத் தம்பதிகள் நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க, நிதி உதவிக்கு விண்ணப்பிக்க செல்பேசி செயலி ஒன்றை அம்மாகாண அரசு அறிமுகம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...