திருப்பதியில் பலத்த பாதுகாப்பு! மைத்திரியின் கைகளில் திருப்பதி லட்டு

October 8, 2017 7:47 AM

11 0

திருப்பதியில் பலத்த பாதுகாப்பு! மைத்திரியின் கைகளில் திருப்பதி லட்டு

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை திருப்பதி தேவாஸ்தானத்தில் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு திருப்பதிக்கு சென்றுள்ளார். அவரைத் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர், அவர் திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்துள்ளார்.

அதை தொடர்ந்து இன்று காலை, ஜனாதிபதி அவரது பாரியார் மற்றும் சில அதிகாரிகளுடன் சிறப்பு சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

பின்னர் ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி வரவழைப்பு அளிக்கப்பட்டதுடன் திருப்பதி லட்டும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

மேலும், 2018ஆம் ஆண்டிற்கான நாள்காட்டி மற்றும் கையேடு, ஏழுமலையானின் திருஉருவப்படத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினார்கள்.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் திருப்பதிக்கு மூன்றாவது தடவையாக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...