திருப்பதி சென்ற மைத்திரிக்கு தமிழர்களால் நடந்த அசிங்கம்!

October 8, 2017 8:04 AM

12 0

திருப்பதி சென்ற மைத்திரிக்கு தமிழர்களால் நடந்த அசிங்கம்!

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழிபாடுகளில் பங்கேற்பதற்காக நேற்று திருப்பதி வந்தடைந்தார். திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவரது துணைவியாருடன், நேற்று திருப்பதி வந்தார்.

இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் வழிபாடுகளை செய்வதற்காக நேற்று திருப்பதி வந்த அவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

அங்கு அவரை மாவட்ட ஆட்சியர், திருப்பதி ஆலய நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையைத் தவிர்த்து, அவர் பெங்களூர் – திருப்பதி நெடுஞ்சாலை வழியாகவே திருப்பதி வந்து சேர்ந்தார்.

தமிழ் அமைப்புகள், சிறிலங்கா அதிபருக்கு எதிராகப் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவல்களை அடுத்து. அதனைத் தவிர்ப்பதற்காக, பயணப்பாதை மாற்றப்பட்டதாக, உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, சிறிலங்கா அதிபரின் பயணத்தை முன்னிட்டு, சித்தூர் மாவட்டத்திலும், திருப்பதி நகரிலும் காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

நேற்று திருப்பதி வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, திடீரென அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள சிறி வாரி பாடாலுவுக்குச் சென்று தரிசனம் செய்தார்.

சிறிலங்கா அதிபரின் பயணத் திட்டத்தில் இந்தப் பயணம் இடம்பெற்றிருக்கவில்லை.திடீரென முடிவெடுத்தே சிறிலங்கா அதிபர் அங்கு சென்றிருந்தார்.

இது நாராயணகிரி மலைகளின் உச்சியில் உள்ள புராணகாலத்து இடமாகும். திருப்பதியில் உள்ள ஏழு மலைகளிலும் மிகவும் உயரமானது இந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: eeladhesam.com

வகை பக்கம்

Loading...