தேர்தல் முடிவுகளினால் அரசாங்கத்தில் மாற்றமா…?

February 12, 2018 4:04 AM

4 0

நிறைவடைந்த தேர்தலின் மூலம் அரசாங்கத்தில் எந்த மாற்றமும் இடம்பெறாதென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் குறைபாடுகளை நிவர்த்திசெய்துகொண்டு முன்நோக்கி செல்ல தாங்கள் எதிர்ப்பார்ப்பதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி முன்னோக்கிச் செல்வதற்கு கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கட்சிப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீநாத் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோர் கட்சித் தலைமையை ஏற்று வழிநடத்த வேண்டும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ரவி கருணாநாயக்க போன்றவர்கள் கட்சிப் பொறுப்புக்களில் இருந்து வெளியேற வேண்டும் என ஸ்ரீநாத் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...