தேர்தலுக்குப் பின் தலைதூக்கும் வன்முறைகள்! 40 முறைப்பாடுகள் பதிவு

February 12, 2018 9:25 AM

8 0

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு வரை அமைதியாக காணப்பட்ட நிலை மாறி தற்போது வன்முறைகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.

கடந்த 36 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 40 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த சம்பவங்களில் பாதிப்புற்ற 11 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 11 தாக்குதல் சம்பவங்கள் மற்றும் 33 பாரிய குற்றச் செயல்கள் தொடர்பாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.

அதே நேரம் சட்டவிரோத கூட்டங்கள் மற்றும் பேரணிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொண்டமை போன்ற சம்பவங்கள் தொடர்பிலும் சுமார் 07 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் அச்சுறுத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக 12 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...