திருச்சியில் மோசமான செயலில் ஈடுபட்ட இலங்கைப் பெண்!

February 8, 2018 12:42 AM

15 0

பிறந்த தேதிக்கான ஆவணத்தை இரு தடவைகள் மாற்றிக் கொடுத்து, கடவுச்சீட்டு எடுக்க முயன்ற, இலங்கைப் பெண் ஒருவர் தமிழ்நாடு, திருச்சியில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி விமானநிலையப் பகுதியில் வசிப்பவர் குயின்மேரி, வயது 52. இலங்கையைச் சேர்ந்த இவர், பல ஆண்டுகளாக, திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த, 2016ம் ஆண்டு, தனக்கு இந்திய நாட்டின் கடவுச்சீட்டு வழங்கக் கோரி, திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், குயின்மேரி விண்ணப்பித்தார்.

அப்போது, அவரது பிறந்த தேதிக்கான ஆவணத்தில் குளறுபடி இருந்ததால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தில், பிறந்த தேதிக்கு வேறு ஆவணத்தை அளித்திருந்தார்.

இது குறித்து, மண்டல பாஸ்போர்ட் அலுவலர் லிங்குசாமி, திருச்சி விமானநிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, குயின்மேரி கைது செய்யப்பட்டார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...