திருகோணமலையில் கேரள கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டப்பணம்

December 8, 2017 7:48 AM

13 0

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 300 மில்லிகிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த சந்தேக நபர் ஒருவருக்கு திருகோணமலை நீதிமன்றத்தினால் 6,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்சா முன்னிலையில் குறித்த சந்தேகநபரை நேற்றைய தினம் ஆஜர்ப்படுத்தியபோதே தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

பாலையூற்று, உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டப்பனம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக உப்புவெளி போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...