தாய்வான் வங்கி கட்டமைப்பில் ஊடுறுவி கொள்ளை! இலங்கையின் முக்கிய பிரமுகர் ஒருவர் கைது

October 9, 2017 3:21 PM

5 0

தாய்வான் வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் என்.எம்.எஸ். முணசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட என்.எம்.எஸ். முணசிங்கவை நாளை தினம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுத்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தாய்வான் ஈஸ்டன் இன்டர்நேஷனல் வங்கி கணிணி கட்டமைப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து, 60 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை கொள்ளையிட்ட சம்பவம் குறித்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த சம்பவம் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...